சென்னை: தமிழகம் முழுவதும், இளம் வாக்காளர்கள் சேர்ப்பு முகாம், இன்று துவங்குகிறது.
தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி,
18 வயது முதல், 20 வயதிற்கு உட்பட்ட, இளம் வாக்காளர்களின் பெயரை, வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம், இன்று மாநிலம் முழுவதும் துவங்குகிறது. இளம் வாக்காளர்களை
சேர்ப்பதற்காக, அனைத்து கல்லுாரிகள், பாலிடெக்னிக்குகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்
ஆகியவற்றில், தலா, ஐந்து பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு,
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, 'ஆன்லைனில்' எப்படி விண்ணப்பிப்பது என, பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெறும் மாணவர்கள், தங்கள் கல்வி நிறுவனங்களில், வாக்காளர்
பட்டியலில், பெயர் சேர்க்காமல் உள்ளவர்களின்
பெயர்களை சேர்ப்பர். இதன்படி, 1999க்கு முன் பிறந்தவர்களின் பெயர்,
வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். இது தவிர,
அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், ஜூலை, 9 மற்றும், 23ம் தேதி, நடக்கும் முகாம்களில் மாற்றுத்
திறனாளிகளை சேர்க்க, அதிக கவனம் செலுத்தப்படும்.
No comments:
Post a Comment